தோனிக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் மகள் …. என்ஜாய் பண்ணும் தல !!

Published : Dec 03, 2018, 11:43 AM IST
தோனிக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் மகள் …. என்ஜாய் பண்ணும் தல  !!

சுருக்கம்

மகேந்திர சிங் தோனி தனது மகள் கற்றுக் கொடுப்பதற்கு ஏற்ப நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டைப் பெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்  தோனி குறித்து அனைவருக்கும் தெரியும். எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் டென்ஷன் ஆகாத மனிதர் அவர். அதே நேரத்தில் கிரிக்கெட், தொழில், விளம்பரங்கள் என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது மனைவி மற்றும்  மகளுடன் நேரத்தைச் செலவிடுவதில் அவர் வல்லவர் என்றே சொல்ல வேண்டும்.

தோனி  தனது மனைவி, மகளுடன் எங்கு சென்றாலும் அங்கு எடுக்கும் போடோக்கள், வீடியோ போன்றவற்றை தமது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பக்கங்களில வெளியிட்டு மகிழ்ச்சி அடைவார். தனது ரசிகர்களையும் அவர் மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.

அண்மையில் அவரது மகள் தோனிக்கு தமிழ் கற்றுத் தரும் வீடியோவை வெளியிட்டு தமிழ் நெஞ்சங்களை அள்ளினார்.  இந்நிலையில் தற்போது அவர் தனது மகளுடன் நடனமாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் தோனியின் மகள் ஸிவா தோனிக்கு நடனம் கற்றுக்கொடுக்கிறார். மகள் சொல்லிக்கொடுக்கும் நடன அசைவுகளை கவனித்தபடியே தோனி நடனமாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது. ஸிவாவின் நடனம் அழகாக இருப்பதாக பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி