2019 உலக கோப்பையை இந்திய அணி தான் வெல்லுமாம்!!

By karthikeyan VFirst Published Dec 3, 2018, 10:41 AM IST
Highlights

2019 உலக கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 

2019 உலக கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
அடுத்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி உலக கோப்பை தொடங்குகிறது. உலக கோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இதுவரை உலக கோப்பையை வென்றிராத இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. அதேநேரத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சர்ஃப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தான் ஆகிய அணிகள் வலுவாக உள்ளன. 

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சிறப்பாக உள்ளது. இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் வலுவாக திகழும் நிலையில், ஒவ்வொரு அணியுமே உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இந்திய அணியை பொறுத்தமட்டில் ரோஹித், தவான், கோலி என டாப் ஆர்டர் வலுவாக உள்ளது. நீண்ட காலமாக நீடித்துவந்த நான்காமிட பிரச்னைக்கு ராயுடு தீர்வைக் கொடுத்துள்ளார். ரிஷப் பண்ட், தோனி, கேதர், பாண்டியா என சிறந்த பேட்ஸ்மேன்கள் மிடில் ஆர்டரில் இருந்தாலும் அவர்கள் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். பவுலிங்கை பொறுத்தமட்டில் முன்னப்போதையும் விட இந்திய அணி மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு யூனிட்டை பெற்றுள்ளது. அதனால் பவுலிங்கிலும் இந்திய அணி சிறந்தே விளங்குகிறது. 

1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் என மொத்தம் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, கோலியின் தலைமையில் மூன்றாவது கோப்பையை எதிர்நோக்குகிறது. 

உலக கோப்பை பரபரப்பு இப்போதே தொடங்கிவிட்ட நிலையில், பல முன்னாள் வீரர்கள் உலக கோப்பையை வெல்லும் அணி குறித்த தங்களது கணிப்புகளையும் விருப்புகளையும் ஆருடங்களையும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், உலக கோப்பை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, உலக கோப்பைக்கு இன்னும் எவ்வளவு காலம் இருந்தாலும் சரி, இந்தியா அணி கோப்பையை வெல்வதற்கான சாத்தியக்கூறுகளே உள்ளன. தற்போதைய இந்திய அணி கோப்பையை வெல்லும் தகுதியையும் திறமையையும் பெற்றுள்ளது. பவுலிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலுமே சிறந்து விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்தில் இந்திய அணி சர்வதேச தொடர்களில் சிறப்பாகவே ஆடியுள்ளது. இங்கிலாந்து நடத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் ஒருமுறை கோப்பையை வென்றதோடு, மற்றொரு முறை(2017) இறுதி போட்டி வரை சென்றுள்ளது. எனவே இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 
 

click me!