தோனி மட்டுமே செய்த சாதனை ஒண்ணு இருக்கு..! உங்களுக்கு தெரியுமா..?

 
Published : Jun 11, 2018, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
தோனி மட்டுமே செய்த சாதனை ஒண்ணு இருக்கு..! உங்களுக்கு தெரியுமா..?

சுருக்கம்

dhoni has a unbreakable record

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மட்டுமே செய்த ஒன்று இருக்கிறது. சர்வதேச அளவில் வேறு எந்த வீரரும் அந்த சாதனையை செய்ததில்லை. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சிறந்த ஃபினிஷர் மற்றும் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், தனது சிறந்த கேப்டன்சியால் இந்திய அணிக்கு மூன்று விதமான சாம்பியன்ஷிப்பையும் வென்று கொடுத்தவர்.

டி20 போட்டிகளில் அதிகமான கேட்ச்சுகள், அதிகமான ஸ்டம்பிங்குகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் அதிகமான கேட்ச்சுகளில் மூன்றாமிடம், ஸ்டம்பிங்குகளில் முதலிடம் என விக்கெட் கீப்பிங்கில் பல மைல்கற்களை எட்டி, சாதனைகளை படைத்துள்ளார். 

ஆனால், தோனி மட்டுமே செய்த சாதனை ஒன்றிருக்கிறது. பேட்டிங், விக்கெட் கீப்பிங் மட்டுமல்லாமல் அவ்வப்போது தோனி பவுலிங்கும் வீசியுள்ளார். 9 சர்வதேச போட்டிகளில் பந்துவீசியுள்ளார் தோனி. 132 பந்துகளை வீசியுள்ள தோனி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். ஒரு விக்கெட் கீப்பரால் வீசப்பட்ட அதிகமான பந்துகள் இதுதான்.

சங்கக்கரா, மார்க் பவுச்சர் உள்ளிட்ட சில விக்கெட் கீப்பர்கள், அவ்வப்போது பந்து வீசி பார்த்ததுண்டு. ஆனால் தோனி மட்டுமே 9 சர்வதேச போட்டிகளில் பந்துவீசியுள்ளார். வேறு எந்த விக்கெட் கீப்பரும் தோனி அளவிற்கு பந்துவீசியதில்லை. 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!
IND vs SA 3வது ஓடிஐ..இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. தமிழக வீரர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!