ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அப்படி செய்தது ஏன்..? தவான் அதிரடி விளக்கம்

By karthikeyan VFirst Published Sep 28, 2018, 10:38 AM IST
Highlights

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தானும் ரோஹித்தும் ஓய்வில் இருந்தது ஏன் என ஷிகர் தவான் விளக்கமளித்துள்ளார்.

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தானும் ரோஹித்தும் ஓய்வில் இருந்தது ஏன் என ஷிகர் தவான் விளக்கமளித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. துபாயில் நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. 

இந்த தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை அடுத்து, ரோஹித் சர்மா கேப்டனாகவும் ஷிகர் தவான் துணை கேப்டனாகவும் செயல்பட்டு வருகின்றனர். ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடிவருகின்றனர். 

லீக் சுற்றில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்திய இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்தது. 

ரோஹித் சர்மா சிறப்பாக அணியை வழிநடத்திவருகிறார். அவரது கேப்டன்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வியடையவில்லை. 

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி மட்டும் டிராவில் முடிந்தது. அந்த போட்டியில் ரோஹித் சர்மா, தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு, ராகுல், மனீஷ் பாண்டே, தீபக் சாஹர், சித்தார்த் கவுல் மற்றும் கலீல் அகமது ஆகிய 5 பேரும் அணியில் வாய்ப்பு பெற்று ஆடினர். தோனி கேப்டனாக செயல்பட்டார். பரபரப்பான அந்த போட்டி கடைசி ஓவரில் டிராவில் முடிந்தது. 

இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடக்க உள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துணை கேப்டன் ஷிகர் தவான், ஆஃப்கானிஸ்தான் போட்டியில் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியது குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய ஷிகர் தவான், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் நானும் ரோஹித்தும் ஓய்வில் இருந்தோம். அனைத்து வீரர்களுக்கும் அணியில் ஆட வாய்ப்பளிக்கும் விதமாகவே அந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்திவருகின்றனர். இறுதி போட்டியிலும் சிறப்பாக ஆட வேண்டும் என தவான் தெரிவித்தார். 

click me!