ஹாட்ரிக் முனைப்பில் டெல்லி; முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்பில் மும்பை; வெற்றி யாருக்கு?

 
Published : May 06, 2017, 10:06 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
ஹாட்ரிக் முனைப்பில் டெல்லி; முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்பில் மும்பை; வெற்றி யாருக்கு?

சுருக்கம்

Delhi in hat trick Mumbai to get first place Who won

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், மும்பை அணியும் இன்று டெல்லியில் மோதுகின்றன.

கடந்த இரு ஆட்டங்களை அபாரமாக ஆடி வெற்றி பெற்றுள்ளது டெல்லி அணி. இந்த ஆட்டத்தில் மும்பை வீழ்த்தி 'ஹாட்ரிக்' பெறுமா என்று பார்ப்போம்.

ஆனால், டெல்லி அணிக்கு இருக்கும் உண்மையான சவால், இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றான பிளே ஆஃப் வாய்பை தக்க வைக்க முடியும். இல்லையென்றால், அந்த அணி தொடர முடியாது.

டெல்லி அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோர் மிரட்டுகின்றனர்.  மும்பை பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள்.

மும்பை அணியையும் சும்மா இல்லை. இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றிகளைப் பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முன்னிலையில் உள்ள அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை ஏற்கெனவே உறுதி செய்துவிட்டது.

எனினும், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்பில் உள்ள அந்த அணி, இந்த ஆட்டத்திலும் அபாரமாக ஆடும்.

பார்த்திவ் படேல், ஜோஸ் பட்லர், நிதிஷ் ராணா, கேப்டன் ரோஹித் சர்மா, கிரண் போலார்ட், கிருனால் பாண்டியா, ஹார்திக் பாண்டியா போன்ற முன்னணி பேட்ஸ்மேன்களும், ஜஸ்பிரித் பூம்ரா, மெக்லீனாகான், ஹர்பஜன் சிங் போன்ற பந்துவீச்சாளர்களும் மும்பை அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

இவ்விரு அணிகளும் இதுவரை 19 ஆட்டங்களில் மோதியதில் மும்பை 10 வெற்றிகளையும், டெல்லி 9 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

இன்று இரவு 8 மணிக்கு சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகும்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?