கோல் மழையைப் பொழிந்து வெற்றிக் கண்டது டெல்லி…

Asianet News Tamil  
Published : Nov 28, 2016, 12:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
கோல் மழையைப் பொழிந்து வெற்றிக் கண்டது டெல்லி…

சுருக்கம்

புதுடெல்லி,

3–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் டெல்லியில் நேற்று இரவு நடந்த 50–வது லீக்கில் டெல்லி டைனமோசும், எப்.சி. கோவாவும் மோதின. இதில் கோலை மழையாய் பொழிந்து 5-1 என்ற கணக்கில் டெல்லி வென்றது.

31–வது நிமிடத்தில் கோவா வீரர் புல்கன்கோ கார்டோஜோ கோல் அடித்தார். அதன் பிறகு டெல்லி வீரர்களின் அதிரடி தாக்குதலில் கோவா அணியினர் மிரண்டு போனார்கள். பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது (62 சதவீதம்), கடத்துவது, துல்லியமாக சக வீரர் வசம் தட்டிவிடுவது என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்திய டெல்லி அணி கோல் மழை பொழிந்தது.

மார்செலோ பெரீரா ஹாட்ரிக் (38, 48, 56–வது நிமிடம்) கோலும், ரிச்சர்ட் காட்ஸி (51, 57–வது நிமிடம்) 2 கோலும் அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.

முடிவில் டெல்லி அணி 5–1 என்ற கோல் கணக்கில் கோவாவை பந்தாடியது. இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 20 புள்ளிகளுடன் 2–வது இடத்துக்கு முன்னேறி இருக்கும் டெல்லி அணி அரைஇறுதியை ஏறக்குறைய உறுதி செய்து விட்டது.

அதே சமயம் 8–வது தோல்வியை சந்தித்த கோவா போட்டியை விட்டு வெளியேறியது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs SL: குல்தீப் யாதவை புறக்கணிக்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டில் நீக்கம்? கம்பீரின் பதில் இதோ!
மெஸ்ஸி vs ரொனால்டோ ஜெர்சி ஏலம்: 55 லட்சத்திற்குப் விலை போனது யாருடையது? ஏலக்களத்திலும் ‘கிங்’ யார்?