
ஐபிஎல் போட்டிகளில் இந்தாண்டு டெல்லி டேர்டேவில்ஸ் அணி பட்டம் வெல்லும் என்று அதன் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லி டேர்டேவில்ஸ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள பாண்டிங் நேற்று செய்தியாளர்களிடம், "கெளதம் காம்பீர் தலைமையில் டேர் டெவில்ஸ் அணி இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
அணியின் முந்தைய நிலை குறித்து கவலையில்லை.
தற்போது புதிய வீரர்களைக் கொண்ட குழு உள்ளது. வீரர்கள் அனைவரும் நன்றாக தயார்படுத்திக் கொண்டுள்ளனர்.
களத்தில் திட்டங்களை செயல்படுத்தினால் வெற்றி பெறலாம்" என்று அவர் கூறினார்.
டேர்டெவில்ஸ் அணி கடந்த 10 போட்டிகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெறவில்லை.
இரண்டு முறை அரையிறுதிச் சுற்றுக்கு மட்டுமே முன்னேறியது.
இந்த நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ்அணி வீரரும், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளருமான காகிசோ ரபடா முதுகு காயம் காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.