delhi capitals covid: டெல்லி கேபிடல்ஸ் அணிக்குள் புகுந்த கொரோனா: வீரருக்கு தொற்று உறுதி, பயணம் ஒத்திவைப்பு

Published : Apr 18, 2022, 01:41 PM ISTUpdated : Apr 18, 2022, 01:44 PM IST
delhi capitals covid: டெல்லி கேபிடல்ஸ் அணிக்குள் புகுந்த கொரோனா: வீரருக்கு தொற்று உறுதி, பயணம் ஒத்திவைப்பு

சுருக்கம்

delhi capitals covid: ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, மற்ற வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். 

ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, மற்ற வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். 

பயணம் ஒத்திவைப்பு

இதனால் புதன்கிழமை பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாடுவதற்கு புனே செல்லும் பயணத்தை டெல்லி அணி  வீரர்கள் ஒத்திவைத்துள்ளனர்.
ஏற்கெனவே டெல்லி கேபிடல்ஸ் அணியின் உடற்பயிற்சி நிபுணர் பாட்ரிக் ஃபர்ஹத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் வீரர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்லும் முன் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை நடத்தப்படும்.

அந்தவகையில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை நடத்தப்பட்டபோது, வீரர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மற்ற வீரர்கள் அனைவுரும் அவர்களின் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அறைக்கும் சென்று வீரர்கள் தனித்தனியாக இனிமேல்பரிசோதிக்கப்பட உள்ளனர்.

விதிமுறை

பிசிசிஐ விதிமுறைப்படி ஒரு அணி கொரோனா பரவல் காரணமாக ப்ளேயிங் லெவனுக்கு கூட வீரர்கள் இல்லாவிட்டால் போட்டி தள்ளிவைக்கப்படும். அதன்பின்பும் விளையாட முடியாவிட்டால், ஐபிஎல் தொழில்நுட்பக் குழுவுக்கு அனுப்பி முடிவு எடுக்கப்படும். 

தடை

கடந்த சனிக்கிழமை டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி அணிகளுக்கு இடைய ஆட்டம் நடந்தது. நாட்டில் கொரோனா பரவல் இருப்பதைத் தொடர்ந்து வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கவோ அல்லது கட்டி அணைக்கவோ கூடாது என்றுபிசிசிஐ தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்ககது

டெல்லி கேபிடல்ஸ் அணியில் கொரோனாவில் பாதிக்கப்பட்ட வீரர்உள்நாட்டு வீரர் இல்லை வெளிநாட்டு வீரர் என்ற தகவல் மட்டும் கிடைத்துள்ளது அந்த வீரர் யார் என்ற விவரம் தெரியவில்லை. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் லேசான தலைவலியும், தொண்டை வலியும் இருப்பதாகத் தெரிவித்தார், இதையடுத்து, நடத்தப்பட்ட ரேபிட்ஆன்டிஜென் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Sakib Hussain Net Worth: முதல் மேட்ச்லயே 4 விக்கெட்! யார் இந்த சகிப் ஹுசைன்? சொத்து மதிப்பு எவ்வளவு?
Sakib Hussain: 'ஷூ வாங்க காசு இல்ல'னு அழுத மகன்.. நகையை விற்ற தாய்! SRH வீரரின் பகீர் பின்னணி..