சிஎஸ்கே டீம் ஒரு குடும்பம் மாதிரினு எல்லாருமே சொல்வாங்க.. அது ஏன்னு நான் உள்ளே போய்தான் தெரிஞ்சுகிட்டேன்!! நெகிழும் வீரர்

By karthikeyan VFirst Published Jan 25, 2019, 3:54 PM IST
Highlights

தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ(சிஎஸ்கேவிற்கு தடை விதிக்கப்பட்ட 2 சீசனை தவிர) ஆகிய வீரர்கள் முதல் சீசன் முதல் சென்னை அணியில் ஆடிவருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தோனி, சென்னையை தனது இரண்டாவது வீடு என அடிக்கடி கூறுவது வழக்கம். 

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 11 சீசன்களில் 3 முறை சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. 

தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ(சிஎஸ்கேவிற்கு தடை விதிக்கப்பட்ட 2 சீசனை தவிர) ஆகிய வீரர்கள் முதல் சீசன் முதல் சென்னை அணியில் ஆடிவருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தோனி, சென்னையை தனது இரண்டாவது வீடு என அடிக்கடி கூறுவது வழக்கம்.  அந்தளவிற்கு சென்னைக்கும் சிஎஸ்கே அணியில் ஆடும் தோனி உள்ளிட்ட வீரர்களுக்குமான உறவு வலுவானது. 

சிஎஸ்கே அணியில் ஆடிய மற்றும் ஆடும் வீரர்கள் பலர் சிஎஸ்கே அணி ஒரு குடும்பம் போல என்று கூறியுள்ளனர். ஒரு அணியை போல இல்லாமல் ஓய்வறையில் அனைவருமே ஒரு குடும்பத்தைப் போலத்தான் இருப்பார்கள் என்று பல வீரர்கள் கூறியுள்ளனர்.

அந்த வகையில் கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் ஆடிய தீபக் சாஹர், இந்த சீசனிலும் சிஎஸ்கேவால் தக்கவைக்கப்பட்டுள்ளார்.  கடந்த சீசனில் 80 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட தீபக் சாஹர், 12 போட்டிகளில் ஆடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஞ்சி டிராபி தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடினார். 

இந்நிலையில், சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டுள்ள தீபக் சாஹர், மை நேஷன் ஆங்கில இணையதளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், சிஎஸ்கே அணி குறித்து பேசியுள்ளார். சிஎஸ்கே அணி ஒரு குடும்பம் போல என்று பலர் கூறியுள்ளனரே, உங்கள் அனுபவம் எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு பதிலளித்த தீபக் சாஹர், நான் எப்போதுமே சிஎஸ்கே அணிக்கே ஆட விரும்புகிறேன். நான் சிஎஸ்கே அணியில் ஆடுவதற்கு முன்பாக அந்த அணியின் ஓய்வறை சூழல் குறித்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் நான் முதன்முதலாக சென்னை அணியில் இணைந்தபோது ஒரு குடும்பத்தை போல உணர்ந்தேன். அணியின் சூழல் கிரேட். எந்த வீரருக்கும் நெருக்கடி கொடுப்பதே கிடையாது. தோனி உட்பட அனைவருமே என்னை வீட்டில் இருப்பதைப்போல உணரவைத்தனர். இதுபோன்ற ஓய்வறை சூழல், நமது சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர உதவும் என்று தீபக் சாஹர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 
 

click me!