உக்ரைன் பெண் மருத்துவரிடம் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை வழங்கினார் டேவிட் பெக்காம்

Published : Mar 22, 2022, 06:46 PM IST
உக்ரைன் பெண் மருத்துவரிடம் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை வழங்கினார் டேவிட் பெக்காம்

சுருக்கம்

ரஷ்யா உக்ரைன் மீது போர்த்தாக்குதலில் ஈடுபட்டுவரும் நிலையில், உக்ரைனில் மருத்துவ சேவையில் ஈடுபட்டுவரும் மருத்துவரிடம் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை வழங்கியுள்ளார் இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்.  

உக்ரைன் மீது ரஷ்யா போரில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திவருகிறது. ரஷ்யாவின் தாக்குதல் 27வது நாளாக நீடித்துவருகிறது. சுமார் ஒரு மாதமாக நடந்துவரும் இந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கின்றனர். ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என எதுவுமே தப்பவில்லை. 

குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்திருப்பதுடன், அனைத்து தரப்பினரும் கடும் அவதிப்படுகின்றனர். ரஷ்யாவின் தாக்குதலில் அதிகமாக பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான கார்கிவ் நகரில், மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் இரினா என்ற பெண் மருத்துவரிடம் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை வழங்கியுள்ளார் இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்.

 

இதுகுறித்து பதிவிட்டுள்ள டேவிட் பெக்காம், இன்று நான் எனது சமூக வலைதளங்கள் கணக்கை மருத்துவர் இரினாவிடம் வழங்கியிருக்கிறேன். கார்கிவ் நகரில் கர்ப்பிணி  பெண்களுக்கு சிகிச்சையளித்து உதவிவருகிறார் மருத்துவர் இரினா. உக்ரைனில் இரினா மற்றும் அவரைப்போன்ற மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் சேவையை அனைவரும் எனது பதிவின் மூலம் தெரிந்துகொள்வார்கள் என்பதற்காகவே பதிவிடுகிறேன்.  உங்களால் முடிந்த உதவிகளை யுனிசெஃப் அல்லது இரினா மாதிரியான மருத்துவர்களுக்கு செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார் டேவிட் பெக்காம்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Ind Vs SA 1st T20: கில், பாண்டியா கம்பேக்.. புல் போர்சுடன் களம் இறங்கும் இந்திய அணி..!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!