இந்தியாவுக்கு எதிராக களம் காணும் ஸ்மித் - வார்னர்? ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி விளக்கம்

By karthikeyan VFirst Published Nov 21, 2018, 11:44 AM IST
Highlights

ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இரு முக்கிய வீரர்கள் அணியில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. திடீரென இரு நட்சத்திர வீரர்கள் அணியில் இல்லாததால் அந்த அணி புதிய கேப்டனின் கீழ் திணறிவருகிறது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. ஸ்மித் மற்றும் வார்னருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிகப்பெரிய தண்டனை என பல கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். 

ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இரு முக்கிய வீரர்கள் அணியில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. திடீரென இரு நட்சத்திர வீரர்கள் அணியில் இல்லாததால் அந்த அணி புதிய கேப்டனின் கீழ் திணறிவருகிறது. இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர் தோல்வியை சந்தித்தது ஆஸ்திரேலிய அணி.

இந்நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணி வலுவாக உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி இப்போதுதான் அணியை மறுகட்டமைத்துவருகிறது. இந்திய அணி மிகச்சிறந்த மற்றும் வலுவான வேகப்பந்து வீச்சு யூனிட்டை பெற்றிருக்கும் நிலையில், ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும். 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் இந்திய அணியை எதிர்கொள்வது ஆஸ்திரேலிய அணிக்கு பாதிப்பாக அமையும். எனவே இந்திய தொடருக்கு முன்னதாக ஸ்மித் மற்றும் வார்னரை மீண்டும் அணியில் சேர்க்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பரிசீலித்துவருவதாக தகவல்கள் வெளியாகின. 

இந்தியாவுக்கு எதிரான தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோர் மீதான தடையை நீக்குவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவர் இயர்ல் எடிங்ஸ் தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனையின் முடிவில் 3 பேரின் தண்டனையைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று முடிவு செய்யப்பட்டது. 

3 வீரர்கள் மீதான தடையை நீக்கக் கோரி செய்யப்படும் விவாதங்கள் அனைத்தும் அந்த வீரர்களுக்கு அழுத்தத்தைத்தான் அதிகரிக்கும். அவர்கள் 3 பேரும் தண்டனையை ஏற்றுக்கொண்டு விட்டதால் அவர்கள் மீதான தண்டனையைக் குறைக்கும் பேச்சுக்கு இடமில்லை;தண்டனையைத் திருத்தவும் முடியாது என எடிங்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 
 

click me!