ஒரு சின்ன பையன் ஓவரா ஆட்டம் போடுறான்!! எல்லாரும் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கோம்.. கோலியை கிழித்து தொங்கவிட்ட முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Nov 21, 2018, 10:44 AM IST
Highlights

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது விருப்பத்துக்கு எல்லாம் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி கடுமையாக விமர்சித்துள்ளார். 
 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது விருப்பத்துக்கு எல்லாம் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி கடுமையாக விமர்சித்துள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்து வருகிறார். ஒரு வீரராக புகழின் உச்சம் தொட்டாலும், ஒரு கேப்டனாக அவரது செயல்பாடுகளும் ஆதிக்கமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

அணியிலும் அணி நிர்வாகத்திலும் விராட் கோலியின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. கோலி என்ற ஒற்றை நபரின் ஆதிக்கத்தின் கீழ்தான் மொத்த இந்திய கிரிக்கெட்டும் இயங்கி கொண்டிருப்பதாக விமர்சனங்கள் உள்ளன. கோலியின் தனிப்பட்ட முடிவுகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு கொண்டிருப்பதாகவும் அவரை யாருமே எதிர்த்து பேசுவதில்லை என்றும் கூறப்படுகிறது. 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கோலிக்கு ஆமாம் சாமி போடும் நபராக உள்ளதாக விமர்சனங்கள் இருக்கின்றன. இதுகுறித்து அண்மையில் விளக்கமளித்த கோலி, அந்த தகவலில் உண்மையில்லை என மறுத்ததோடு தன்னுடன் அதிகமாக முரண்படுபவர் ரவி சாஸ்திரிதான் என்றும் அவரது ஆலோசனையின் படியே செயல்படுவதாகவும் விளக்கமளித்தார். 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி, கோலி குறித்து அதிரடியாக பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோலி குறித்து பேசிய பிஷன் சிங் பேடி, விராட் கோலி என்ற ஒரு நபர் அவர் இஷ்டத்துக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறார். நாமும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம். அனில் கும்ப்ளே விவகாரத்தில், கும்ப்ளே என்ன சொல்லியிருக்க போகிறார்? ஆனாலும் கும்ப்ளே அதை பெருந்தன்மையுடன் அப்படியே விட்டுவிட்டார். ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் ஆஸ்திரேலிய அணியை பலவீனமான அணி என்கிறோம். ஆனால் ஒரு அணி இரண்டு தனி நபர்களால் ஆனதல்ல. ஆனால் நம் அணி விராட் கோலி என்ற ஒற்றை நபரால் ஆனதுதான். இந்திய அணியில் அனைத்துமே கோலிதான். அவர் மீது இவ்வளவு கவனக்குவிப்பு இருந்தால் அவரால் எப்படி ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியும்? ஒரு கேப்டனாகவும் ஒரு வீரராகவும் அவர் மீது கடும் அழுத்தங்களை ஏற்படுத்துகிறோம் என்று பிஷன் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
 

click me!