காமன்வெல்த் அப்டேட்:  3-வது முறையாக தங்கம் வென்றார் சுஷில்குமார்...ராகுலும் தங்கம் வென்று அசத்தல்...

Asianet News Tamil  
Published : Apr 13, 2018, 11:46 AM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
காமன்வெல்த் அப்டேட்:  3-வது முறையாக தங்கம் வென்றார் சுஷில்குமார்...ராகுலும் தங்கம் வென்று அசத்தல்...

சுருக்கம்

Commonwealth Update Sushilkumar won gold for 3rd time ... Rahul won gold

காமன்வெல்த் மல்யுத்தப் போட்டிகளில் இந்தியாவின் சுஷில்குமார் மூன்றாவது முறையாக தங்கமும், ராகுல் அவாரே முதல் தங்கமும் வென்று அசத்தியுள்ளனர். 

21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வென்று குவித்து வருகின்றது.

அதன்படி, 74 கிலோ எடை பிரிவில் நடப்புச் சாம்பியனும், 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான சுஷில்குமார் 1 நிமிடம் 20 வினாடிகளில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ் போதாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 

இது காமன்வெல்த் போட்டிகளில் சுஷில்குமார் பெறும் 3-வது தங்கமாகும். முன்னதாக அவர் கனடாவின் பெல்புளோர், பாகிஸ்தானின் முகமது ஆசாத்தை வீழ்த்தினார்.

முதன்முதலாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ள அறிமுக வீரர் ராகுல் அவாரே 57 கிலோ எடைப்பிரிவில் 15-7 என்ற கணக்கில் கனடாவின் ஸ்டீவன் டகஹாஷியை வீழ்த்தி தங்கம் வென்றார்.  

மல்யுத்தப் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கம் இதுவாகும்.  முன்னதாக அவாரே இங்கிலாந்தின் ஜார்ஜ் ராம், ஆஸ்திரேலியாவின் தாமஸ், பாகிஸ்தானின் முகமது பிலால் ஆகியோரை தோல்வியுறச் செய்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ 3-வது ஓடிஐ.. வேஸ்ட் லக்கேஜ்.. ஆல்ரவுண்டரை நீக்கிய பிசிசிஐ.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
IND VS NZ டி20 தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா?