இந்திய பிரதமர் மோடியை பார்த்து கத்துக்கங்க..! பாகிஸ்தான் பிரதமரை விளாசிய அந்நாட்டு பத்திரிகையாளர்

By karthikeyan VFirst Published Aug 7, 2022, 12:58 PM IST
Highlights

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்த மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட்டை பிரதமர் மோடி தேற்றியதை இந்தியர்கள் மட்டுமல்லாது பாகிஸ்தானியர்களும் பாராட்டிவருகின்றனர்.

காமன்வெல்த் மல்யுத்தத்தில் இந்தியாவின் பூஜா கெலாட் வெண்கலம் வென்றார். தன்னால் நாட்டிற்கு தங்கம் வென்று கொடுக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தார் பூஜா கெலாட்.

தங்கம் வெல்ல முடியவில்லை என்று வருந்திய பூஜா கெலாட்டை தேற்றும் விதமாக, நீங்கள் பதக்கம் வென்றது கொண்டாட்டத்திற்குரிய விஷயம். அதனால் மன்னிப்பு கேட்கவேண்டாம். உங்கள் வாழ்க்கை எங்களை ஊக்கப்படுத்துகிறது; மகிழ்ச்சியளிக்கிறது என்று டுவிட்டரில் ஊக்கப்படுத்தினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் மோடியின் டுவீட்டை டேக் செய்து  பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளர் பதிவிட்ட பதிவு, இந்தியா அவர்களது தடகள வீரர்களை இப்படித்தான் நடத்துகிறது. பூஜா கெலாட் தங்கம் வெல்ல முடியாததற்கு வருத்தம் தெரிவித்தார். அவரை இந்திய பிரதமர் மோடி தேற்றியுள்ளார். இதுமாதிரியான ஒரு மெசேஜை கூட பாகிஸ்தான் பிரதமர் அல்லது அதிபரிடமிருந்து நான் பார்த்ததில்லை. பாகிஸ்தான் தடகள வீரர்கள் பதக்கம் வென்றதாவது அவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.


 

This is how India projects their athletes. Pooja Gehlot won bronze and expressed sorrow as she was unable to win the Gold medal, and PM Modi responded to her.
Ever saw such message for Pakistan PM or President? Do they even know that Pakistani athletes are winning medals? https://t.co/kMqKKaju0M

— Shiraz Hassan (@ShirazHassan)
click me!