காமன்வெல்த் பாக்ஸிங்கில் இந்தியாவின் நிகத் ஜரீன் தங்கம் வென்று அசத்தல்

By karthikeyan VFirst Published Aug 7, 2022, 7:47 PM IST
Highlights

காமன்வெல்த் பாக்ஸிங் மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிகத் ஜரீன் தங்கம் வென்று அசத்தினார். 

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய 10ம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்துவருகின்றனர்.

பாக்ஸிங்கில் அமித் பங்கால் மற்றும் நீத்து ஆகிய இருவரும் தங்கம் வென்றனர். பேட்மிண்டனில் பி.வி.சிந்து, லக்‌ஷ்யா சென் ஆகிய இருவரும் ஃபைனலுக்கு முன்னேறி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்தனர்.

மும்முறை தாண்டுதலில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய 2 பதக்கங்களையுமே இந்திய வீரர்கள் வென்றனர். 17.03மீ தூரம் கடந்து எல்தோஸ் பால் தங்கமும், அப்துல்லா அபுபக்கர் வெள்ளியும் வென்று வரலாற்று சாதனை படைத்தனர்.

10ம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்துவரும் நிலையில், பாக்ஸிங் மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன், அயர்லாந்து வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
 

click me!