
21-வது காமன்வெல்த் போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாம் இடம் பெற்றுள்ளது.
21-வது காமன்வெல்த் போட்டி கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடைப்பெற்றது.
கடந்த 4-ஆம் தேதி காமன்வெல்த் போட்டி வண்ணமயமாகத் தொடங்கி 12 நாள்களாக நடைபெற்று வந்தது. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றனர்.
இதில், 26 தங்கம் உள்பட மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளன.
விளையாட்டு வாரியாக இந்தியா பெற்ற பதக்கங்கள்
பாட்மிண்டன் : 6
2 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம்
குத்துச்சண்டை : 9
3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்
தடகளம்: 3
1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம்
டேபிள் டென்னிஸ்: 8
3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம்
துப்பாக்கி சுடுதல்: 16
7 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம்
பளுதூக்குதல் : 9
5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்
மல்யுத்தம்: 12
5 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம்
ஸ்குவாஷ்: 2
2 வெள்ளி
கடந்த 2002 மான்செஸ்டர் போட்டிகளில் 30 தங்கம் உள்பட 69 பதக்கங்களையும், 2010 புதுடெல்லி போட்டிகளில் 38 தங்கம் உள்பட 101 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது. கடந்த 2014 கிளாஸ்கோ போட்டியில் 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலத்துடன் 5-வது இடத்தைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.