
சீன ஓபன் உலக சூப்பர்சீரிஸ் ப்ரீமியர் பாட்மிண்டன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - அஸ்வினி பொன்னப்பா இணை பிரதான சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
சீன ஓபன் உலக சூப்பர்சீரிஸ் ப்ரீமியர் பாட்மிண்டன் சீனாவில் நடைப்பெற்று வருகிறது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவில் சீன தைபேவின் லீ ஜே ஹுவே - வு டி ஜங் இணையை எதிர்கொண்டது சாத்விக் - அஸ்வினி இணை.
இதில் 24-22, 21-7 என்ற செட் கணக்கில் சாத்விக் - அஸ்வினி இணைவென்றது.
இந்த இணை இரண்டாவது தகுதிச்சுற்றில் டென்மார்க்கின் நிக்லஸ் நோர் - சாரா திகேசென் இணை 21-16, 19-21, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறியது.
இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள பிரதான சுற்றில், டென்மார்க்கின் மதியாஸ் கிறிஸ்டியான்சென் - கிறிஸ்டியானா பெடர்சென் இணையை சாத்விக் - அஸ்வினி இணை சந்திக்கிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.