செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழாவில் பட்டு வேட்டி, சட்டையுடன் பட்டைய கிளப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published : Jul 28, 2022, 05:59 PM IST
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழாவில் பட்டு வேட்டி, சட்டையுடன் பட்டைய கிளப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சுருக்கம்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி சட்டையுடன் வந்து செம கெத்தாக அமர்ந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை  முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்கிறது. முதல் முறையாக இந்தியாவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்ற தமிழக அரசு, அதற்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.

186 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் இந்த செஸ் ஒலிம்பியாடில் கலந்துகொண்டு ஆடுகின்றனர். அவர்கள் எல்லாரும் சென்னை வந்துவிட்டனர்.  அவர்கள் அனைவருக்கும் அமோக வரவேற்பளிக்கப்பட்டு சென்னையில் தங்கவைக்கப்பட்டு உபசரிக்கப்பட்டனர்.

முதல் முறையாக இந்தியாவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடரை தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பு பெற்ற தமிழக அரசு, உலகமே வியக்கும் அளவிற்கு இந்த போட்டியை நடத்திக்காட்ட உறுதி பூண்டது. அதற்காக மாமல்லபுரத்தில், ஒரே சமயத்தில் 1414 பேர் விளையாடக்கூடிய வகையில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது செஸ் அரங்கம்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தொடக்கவிழா நடந்துவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் என பல தரப்பினரும் கலந்துகொள்கின்றனர். பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்திலிருந்து அரங்கம் வந்துகொண்டிருக்கிறார். மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். செஸ் ஒலிம்பியாட் தொடரை பிரதமர் மோடி தொடங்கிவைக்கவுள்ளார்.

பிரதமர் மோடி அரங்கிற்கு வருவதற்கு முன்பாக, அணிகள் அறிமுகம் உள்ளிட்ட மற்ற நிகழ்வுகள் நடந்துவருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணியளவில் அரங்கிற்கு வந்துவிட்டார். உலகமே வியக்குமளவிற்கு செஸ் ஒலிம்பியாட்டை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்துவிட்டு ஆர்ப்பாட்டமே இல்லாமல் அரங்கிற்கு வந்தார் முதல்வர் ஸ்டாலின். 

உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் இந்த விழாவில் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், பட்டு வேட்டி, சட்டையுடன் வருகை தந்து அமர்ந்திருக்கிறார் ஸ்டாலின். அணிகள் அறிமுகம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றை பட்டு, வேட்டி சட்டையுடன் செம கெத்தாக பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கிரிக்கெட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎல் உரிமையாளரை விளாசிய கவுதம் கம்பீர்! என்ன நடந்தது?
3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்