
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும், பாகிஸ்தானும் இன்று மோதுகின்றன.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவோடு பாகிஸ்தான் எட்பாஸ்டனில் மோதுகிறது.
முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணி, இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறும் ஆயத்தமாக இருக்கிறது.
ஆனால், பாகிஸ்தான் அணிக்கோ, முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றதால் இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு போக முடியும்.
பாகிஸ்தானோடு ஒப்பிடுகையில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாகவே உள்ளது.
பேட்டிங்கில் ஹஷிம் ஆம்லா, குயின்டன் டி காக், டூபிளெஸ்ஸிஸ், கேப்டன் டிவில்லியர்ஸ், டுமினி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மோர்ன் மோர்கல், காகிசோ ரபாடா, கிறிஸ் மோரீஸ் கூட்டணி பலம் சேர்க்கிறது. சுழற்பந்து வீச்சில் இம்ரான் தாஹிரை நம்பியுள்ளது தென் ஆப்பிரிக்கா.
பாகிஸ்தானின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் அசார் அலி, அகமது ஷெஸாத், பாபர் ஆஸம், முகமது ஹபீஸ், ஷோயிப் மாலிக், கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது போன்ற வலுவான வீரர்கள் இருக்கின்றனர். ஆனால், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த வலுவான ஆட்டத்தை தந்தாக வேண்டும்.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் வஹாப் ரியாஸ் கணுக்கால் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து விலகிவிட்டார்.
எனவே முகமது ஆமிர், ஜூனைத் கான் ஆகியோரையே நம்பியுள்ளது பாகிஸ்தான்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.