கோலி தான் இல்லையே.. நான் வேணா 3ம் இடத்தில் இறங்கவா..? சாஹலின் கேள்விக்கு கேப்டன் ரோஹித்தின் பதில்

By karthikeyan VFirst Published Feb 4, 2019, 12:59 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் வெறும் 92 ரன்களில் ஆல் அவுட்டானது இந்திய அணி. அந்த போட்டியில் இந்திய அணியின் சார்பில் அதிகபட்ச ஸ்கோரே சாஹல் அடித்ததுதான். 10ம் வரிசையில் களமிறங்கிய சாஹல், 18 ரன்களை அடித்து அசத்தினார். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என அனைத்து வகையிலும் நியூசிலாந்து அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய இந்திய அணி, நான்காவது போட்டியில் மட்டும் படுமோசமாக சொதப்பி படுதோல்வியடைந்தது. பின்னர் ஐந்தாவது போட்டியில் அந்த படுதோல்வியிலிருந்து மீண்டு ஒரு அணியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டது. 

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் வெறும் 92 ரன்களில் ஆல் அவுட்டானது இந்திய அணி. அந்த போட்டியில் இந்திய அணியின் சார்பில் அதிகபட்ச ஸ்கோரே சாஹல் அடித்ததுதான். 10ம் வரிசையில் களமிறங்கிய சாஹல், 18 ரன்களை அடித்து மிரட்டினார். கடைசிவரை அவர் ஆட்டமிழக்கவும் இல்லை. அந்த போட்டியில் இந்திய அணி தோற்றது. 

படுதோல்வி அடைந்து இருந்தாலும், கடைசி போட்டியிலும் 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இக்கட்டான நிலையில், நான்காவது போட்டியில் செய்த தவறை மிடில் ஆர்டர் செய்யவில்லை. ராயுடுவும் விஜய் சங்கரும் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இறுதிக்கட்டத்தில் கேதரும் ஹர்திக் பாண்டியாவும் அடித்து ஆட 252 ரன்களை குவித்த இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி போட்டியில் வென்ற பிறகு, சாஹல் - ரோஹித் இடையேயான உரையாடல் ஒன்று நடந்தது. கோலி ஓய்வில் இருப்பதால் அவருக்கு பதிலாக கடைசி 2 ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடருக்கு தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் ரோஹித்திடம் சாஹல் ஒரு கேள்வி கேட்டார். அதாவது, கோலிதான் இல்லையே.. நான் வேண்டுமானால் 3ம் வரிசையில் பேட்டிங் இறங்கலாமா? என்று சாஹல் ரோஹித்திடம் கிண்டலாக கேட்டார்.

அதற்கு, இதுகுறித்து அணி நிர்வாகத்திடம் பேசுகிறேன். ஆனால் உன்னை 3ம் வரிசையில் இறக்கிவிட்டால், நாம் வெல்லும் போட்டியில் நீதான் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரராக இருக்க வேண்டும், தோற்கும் போட்டியில் அல்ல என்று பதிலளித்துள்ளார். 

போகிறபோக்கில் சாஹல் பெரிய பேட்ஸ்மேனாகி கோலியின் இடத்தை பிடித்துவிடுவாரோ..? என்று மனதில் கிண்டலான கேள்வி எழுந்திருக்குமே... எழத்தானே செய்யும்..
 

click me!