
உலக செஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் -ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் இடையிலான 8-வது சுற்று ஆட்டத்தில் கர்ஜாகின் ஜெயித்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 8 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் கர்ஜாகின் 4.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். கார்ல்சன் 3.5 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளார்.
இன்று நடைபெற்ற 8-வது சுற்றில் 52-வது நகர்த்தலின்போது தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்
கார்ல்சன். அடுத்தச் சுற்று புதன்கிழமை தொடங்கவுள்ளது. இன்னமும் 4 சுற்றுகளே மீதமுள்ள நிலையில் அவற்றில் இரண்டு சுற்றுகளில் வெற்றிபெற்றால் மட்டுமே கார்ல்சனால் மீண்டும் உலக சாம்பியன் ஆகமுடியும் என்கிற இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே உலக செஸ் போட்டியை வென்று உலக சாம்பியன் ஆகும் வாய்ப்பு கர்ஜாகினுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்துவரும் நான்கு சுற்றுகளும் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.