கேப்டனுக்கு பிடிக்கல அதனால வெளியே போறேன் – அனில் கும்ப்லே விளக்கம்…

Asianet News Tamil  
Published : Jun 21, 2017, 12:15 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
கேப்டனுக்கு பிடிக்கல அதனால வெளியே போறேன் – அனில் கும்ப்லே விளக்கம்…

சுருக்கம்

Captain not like me so Out Im Going Out - Anil Kumble

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலிக்கு என்னை பிடிக்காததால், அணியின்  தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினேன் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார். அனில் கும்ப்ளேவும் தனது ராஜிநாமா அறிக்கையில், “கோலியுடனான கருத்து வேறுபாடுகளால் பதவியை ராஜிநாமா செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதனை பிசிசிஐ தனது அறிக்கையின் மூலம் உறுதி செய்துள்ளது. இதன் விளைவாக கும்ப்ளேவின் பதவி விலகலையடுத்து சமூக வலைத்தளத்தில் கும்ப்ளேவுக்கு ஆதரவாகவும், கோலிக்கு எதிராகவும் கருத்துகள் பதியப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் கும்ப்ளேவின் ராஜிநாமா குறித்த பிசிசிஐ-யின் அறிவிப்பு:

“மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அணில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க கிரிக்கெட் ஆலோசனைக் குழு அனுமதி அளித்தது. ஆனால், அதனை ஏற்க மறுத்து கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார்.

இந்திய அணிக்கான அடுத்த தலைமைப் பயிற்சியாளரை நியமிக்கும் விவகாரத்தில் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுடன் ஆலோசித்து பிசிசிஐ செயல்படும்.

இந்த இடைப்பட்டக் காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் பங்கேற்கச் சென்றுள்ள இந்திய அணியின் கண்காணிப்பாளராக கிரிக்கெட் நடவடிக்கைகள் மேலாளர் எம்.வி.ஸ்ரீதர் நியமிக்கப்படுகிறார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL: சிஎஸ்கே போட்டி நடைபெறும் இடம் திடீர் மாற்றம்.. ரசிகர்கள் ஷாக்! என்ன காரணம்?
IPL: MI-க்கு சாதகமாக அம்பயர்கள்? ஹர்திக்கிற்கு ஒரு ரூல்.. ஸ்டப்ஸ்க்கு ஒரு ரூலா? என்ன நடந்தது?