பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய அணில் கும்ப்ளே... கேப்டன் கோலியுடன் மோதல் காரணமா?

Asianet News Tamil  
Published : Jun 20, 2017, 09:35 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய அணில் கும்ப்ளே...  கேப்டன் கோலியுடன் மோதல் காரணமா?

சுருக்கம்

Anil Kumble steps down as India coach Rift with Virat Kohli the reason

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அணில் கும்ப்ளேராஜானிமா செய்வதாத அறிவித்துள்ளார். இதனால் மேற்கு இந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய அணியுடன் கும்ப்ளே செல்லமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பிவிட்டதாக டுவிட்டரில் அணில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் விராத் கோலி, கும்ப்ளே இடையிலான மோதல் ராஜினாமாவில் முடிந்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கும், பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும்இடையே கடந்த சில மாதங்களாக உறவு சரியில்லாமல் மோதலில் இருந்து வந்தது.பயிற்சியின்போதும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்தனர். இதனால் அணி வீரர்கள் தேர்விலும் இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருந்தது.

இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருவரின் உறவு விரிசல் அப்பட்டமாகி, தனித்தனியே செயல்படத் தொடங்கினர். கும்ப்ளே பேட்டிங் பயிற்சி அதிகமாக அளிக்காமல் பந்துவீச்சில் மட்டும் கவனம் செலுத்தனார். இதன் காரணமாகவே பைனலில் இந்திய அணி தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது என்று கூறப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து இதே சூழலில் பணியாற்ற முடியாத நிலையில், அணில்கும்ப்ளே தனது பயிற்சியாளர்  பதவியை இன்று  ராஜினாமா செய்தார். மேலும், வரும் 23-ந்தேதி முதல் மே.இ.தீவுகள் சென்று அந்த நாட்டு அணியுடன் 5 ஒருநாள்போட்டி, 20ஓவர்கள் போட்டியில் பங்ேகற்கும் இந்திய அணியுடனும் தான் செல்லப் போவதில்லை என கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி. கமிட்டியின் உறுப்பினராக இருக்கம் கும்ப்ளே 23-ந்தேதி நடக்கும் அந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து, ஆலோசனை குழு உறுப்பினர்களாக இருக்கும் சச்சின் டெண்டுல்கர்,லட்சுமண், கங்குலி ஆகியோர் அடுத்த பயிற்சியாளரை தேடும் பணியில் இனி தீவிரமாக இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL: சிஎஸ்கே போட்டி நடைபெறும் இடம் திடீர் மாற்றம்.. ரசிகர்கள் ஷாக்! என்ன காரணம்?
IPL: MI-க்கு சாதகமாக அம்பயர்கள்? ஹர்திக்கிற்கு ஒரு ரூல்.. ஸ்டப்ஸ்க்கு ஒரு ரூலா? என்ன நடந்தது?