
சூப்பர் சீரிஸ் பிரிமீயர், சூப்பர் சீரிஸ், கிராண்ட்ப்ரீ கோல்டு ஆகிய மூன்று பாட்மிண்டன் போட்டிகளிலும் பட்டம் வென்ற ஒரே இந்தியர் ஸ்ரீகாந்த் மட்டுமே என்று புகாழாரம் சூட்டியுள்ளார் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல்.
உலக ஹாக்கி லீக் இலண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இதனையடுத்து இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல்.
மேலும் அவர் கூறியது: “இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளது.
இதேபோல் இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் ஸ்ரீகாந்துக்கும் வாழ்த்துகள்.
சூப்பர் சீரிஸ் பிரிமீயர், சூப்பர் சீரிஸ், கிராண்ட்ப்ரீ கோல்டு ஆகிய மூன்று பாட்மிண்டன் போட்டிகளிலும் பட்டம் வென்ற ஒரே இந்தியர் ஸ்ரீகாந்த் மட்டுமே. அவரை நான் மட்டுமல்ல, இந்த நாடே வாழ்த்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.