அந்த 2 விஷயத்துக்குமே பும்ராதான் காரணம்!! அதை மட்டும் பண்ணாம இருந்திருந்தா..?

By karthikeyan VFirst Published Aug 22, 2018, 2:43 PM IST
Highlights

இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் பும்ரா அந்த ஒரு விஷயத்தை செய்யாமல் இருந்திருந்தால் போட்டி நேற்றே முடிந்திருக்கும். 
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் பும்ரா அந்த ஒரு விஷயத்தை செய்யாமல் இருந்திருந்தால் போட்டி நேற்றே முடிந்திருக்கும். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் வெற்றியை ருசிக்க இந்திய அணி காத்துக்கொண்டிருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவை. கடைசி நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சில நேரத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும். 

எனினும் நான்காம் நாளான நேற்றே இந்த போட்டி முடிந்திருக்க வேண்டியது. சற்று தாமதமாகிவிட்டது. 521 ரன்கள் என்ற கடின இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 62 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு பட்லர் - ஸ்டோக்ஸ் ஜோடி, சுமார் 58 ஓவர்கள் ஆடி 169 ரன்கள் சேர்த்து, இந்திய அணியை சோதித்தனர். 

களத்தில் நங்கூரமிட்ட இந்த ஜோடியை நீண்ட நேரத்திற்கு பிறகு பும்ரா பிரித்தார். சதமடித்து 106 ரன்களுடன் களத்தில் இருந்த பட்லரின் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் பும்ரா. அதன்பிறகுதான் இந்திய அணி மீண்டும் போட்டிக்குள் வந்தது. அதன்பிறகு பேர்ஸ்டோ, வோக்ஸ், ஸ்டோக்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. இவர்களில் ஸ்டோக்ஸை மட்டும்தான் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். மற்றவர்களை பும்ரா தான் வீழ்த்தினார். ஸ்டூவர்ட் பிராடின் விக்கெட்டையும் பும்ரா வீழ்த்திவிட்டார். 9 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், அடில் ரஷீத்தும் ஆண்டர்சனும் களத்தில் இருந்தபோது நான்காம் நாள் ஆட்டம் முடிந்தது. 

பட்லர் மற்றும் அதற்கு அடுத்த மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி இந்திய அணியை வெற்றியை நோக்கி நெருங்க வைத்த அதே பும்ராவால் தான், வெற்றி தாமதமும் ஆனது. அடில் ரஷீத்தை நேற்றே வீழ்த்தியிருக்கலாம். இங்கிலாந்து இன்னிங்ஸின் 87வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் அடில் ரஷீத் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் அந்த பந்து நோபால். அதனால் ரஷீத் தப்பினார். அதன்பின்னர் ரஷீத்தை அவுட்டாக்க முடியவில்லை. தற்போது ரஷீத்தும் ஆண்டர்சனும்தான் களத்தில் உள்ளனர். அந்த பந்து நோபாலாக இல்லாமல் இருந்திருந்தால், ரஷீத் அவுட்டாகியிருப்பார். போட்டி நேற்றே முடிந்திருக்கும்.
 

click me!