
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 5-1 என வென்று பழிதீர்த்தது.
இதையடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணி, 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
204 என்ற இலக்குடன் இரண்டாவதாக களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு 7வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட மில்லர், பந்தை தூக்கி அடிக்க பந்து சிக்ஸரை நோக்கி சென்றது. பவுண்டரி லைனில் நின்ற பும்ரா, அசாத்தியமாக பறந்து பந்தை பிடித்தார். பந்தை பிடித்த பும்ரா பவுண்டரி லைனிற்குள் விழ நேர்ந்ததால், காற்றில் இருந்தவாறே பந்தை பவுண்டரி லைனிற்கு வெளியே தூக்கி எறிந்தார்.
பும்ராவின் இந்த அசாத்தியமான கேட்சைக் கண்டு மைதானமே மிரண்டு நின்றது. வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் கைதட்டி பாராட்டினார். பந்தை தூக்கி போட்டதால் அது அவுட் இல்லை என்றபோதிலும் சிக்ஸரும் கிடையாது. ஆனால் ஐசிசியின் புதிய விதிப்படி, பந்தை பிடிக்கும்போது அந்தரத்தில் இருந்தபடியே பவுண்டரி லைனை தாண்டினாலும் கூட அது சிக்ஸர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அதன்படி அது சிக்ஸர் என நடுவர் கைகளை தூக்கி சிக்ஸ் கொடுத்தார். ஆனால் கேப்டன் கோலி நடுவரிடம் முறையிட்டார். எனினும் அதுதான் விதி என்பதால் வேறு வழியில்லை.
அந்த கேட்சால் பலனில்லை என்றபோதிலும் பும்ரா பிடித்த கேட்ச் அனைவரையும் மிரளவைத்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.