
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனை நிகழ்த்திவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படுகிறார். அணியின் வெற்றிக்கு தன்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பதோடு சாதனைகளையும் குவித்து வருகிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரைசதத்துடன் 558 ரன்கள் குவித்து அசத்தினார். 35 ஒருநாள் சதங்களுடன் சச்சினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தற்போதைய சூழலில், சர்வதேச அளவில் அசாத்தியமான பேட்ஸ்மேனாக கோலி திகழ்கிறார்.
இந்நிலையில், கோலி குறித்து முன்னாள் ஜாம்பவான் வீரர் குண்டப்பா விஸ்வநாத் கூறியது:
கோலி நிலையாக நின்று ஆடி சதங்களை குவித்து வருகிறார். கிரிக்கெட்டில் ஒவ்வொரு சாதனையையும் முறியடிக்க கோலிக்கு வாய்ப்புகள் அருமையாக உள்ளன. சாதனைகள் என்றாலே முறியடிக்கப்பட வேண்டும். அந்த வகையில், சச்சினின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை கோலி முறியடித்துவிடுவார். அது சச்சின் டெண்டுல்கருக்கே மகிழ்ச்சியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
களத்தில் கோலி எப்படி செயல்படுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை குவிக்க வேண்டும் என்கிற அவரது தாகத்தையும் ஆக்ரோஷத்தையும் பார்க்கும்போது வேற லெவலில் இருக்கிறது.
கேப்டனாக அவரது செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. கேப்டனாக கோலி சிறப்பாகவே செயல்படுகிறார். அவரை யாருடனும் ஒப்பிட வேண்டாம். கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி, எந்த நாட்டிற்கும் சென்று அந்த அணியினரை வெல்லும் திறன் வாய்ந்தது.
தோனி குறித்தும் கேள்வி கேட்கிறார்கள். தோனி அப்போது மட்டுமல்ல.. இப்போதும் டேஞ்சரஸ் பேட்ஸ்மேன் தான் என குண்டப்பா விஸ்வநாத் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.