
தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் புதிதாக மூன்று தேசிய சாதனைகள் எட்டப்பட்டன.
தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர பிரதேச மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் புதிதாக எட்டப்பட்ட மூன்று தேசிய சாதனைகள்: "18 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கான உயரம் தாண்டுதலில் அரியாணாவின் ருபீனா யாதவ் 1.81 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.
முன்னதாக, மேற்கு வங்கத்தின் ஸ்வப்னா பர்மன் கடந்த 2013-ல் 1.71 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது."
"14 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் பீகாரின் அவினாஷ் குமார் 6.79 மீட்டர் தாண்டி சாதனை படைத்தார்.
முன்னதாக, ஒடிஸாவின் சுனாராம் முர்மு கடந்த 2008-ஆம் ஆண்டு 6.63 மீட்டர் தாண்டியதே அதிகபட்சமாக இருந்தது."
"16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கான ஈட்டி எறிதலில் அரியாணாவின் ஜோதி 41.24 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
முன்னதாக, தமிழகத்தின் ஹேமமாலினி கடந்த 2015-ஆம் ஆண்டு 39.69 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது."
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.