கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் மகளிர் அணி சாம்பியன் வென்று அசத்தல்...

Asianet News Tamil  
Published : Apr 24, 2018, 10:19 AM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் மகளிர் அணி சாம்பியன் வென்று அசத்தல்...

சுருக்கம்

Brazil Women Team Champion in Copa America Football

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் மகளிர் அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர். 

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் அணி தான் ஆடிய 7 லீக் ஆட்டங்களிலுமே வெற்றி கண்டிருந்தது. 

இதனிடையே, ரௌண்ட் ராபினின் கடைசி ஆட்டத்தில் 4 புள்ளிகளுடன் இருந்த சிலி, 3 புள்ளிகளுடன் இருந்த ஆர்ஜென்டீனாவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

அதனையடுத்து, பிரேசிலுக்கான வெற்றி ஏறத்தாழ உறுதியானது. அதேவேளையில், சிலியும் தனது உலகக் கோப்பை போட்டி வாய்ப்பை உறுதி செய்தது.

இந்த நிலையில், ஒரு புள்ளியுடன் இருந்த கொலம்பியாவை இறுதி ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் வென்றது பிரேசில் மகளிரணி.

இந்த வெற்றியின் மூலமாக, அடுத்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கும், 2020-ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் பிரேசில் மகளிர் அணி தகுதிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி 8-வது வருடமாக நடக்கிறது என்பதும், இந்தப் போட்டியில், பிரேசில் அணி 7-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பதும் கூடுதல் தகவல்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

காதலியை கரம் பிடிக்கும் ஷிகர் தவான்.. 2வது திருமணம்.. யார் இந்த சோஃபி ஷைன்?
IND vs NZ: தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!