
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி, வங்கதேசத்தை துவம்சம் செய்தது.
இலங்கை தலைநகர் கொழும்பில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்கள் எடுத்தது வங்கதேசம்.
அந்த அணியின் செளம்ய சர்க்கார் 29, மொஸாதீக் ஹுசைன் ஆட்டமிழக்காமல் 34, மகமதுல்லா 31 அதிகபட்ச ஒட்டங்கள் எடுத்தனர்.
இலங்கைத் தரப்பில் லசித் மலிங்கா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய இலங்கை அணியில் கேப்டன் உபுல் தரங்கா 24, முனவீரா 8, குணரத்னே 17 ஒட்டங்களில் அவுட்டாக தொடக்க வீரரான குசல் பெரேரா 53 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்களை விளாசினார்.
இதனால், இலங்கை அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
வங்கதேசம் தரப்பில் மோர்ட்டஸா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
குசல் பெரேரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.