
கொச்சி:
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டத்தின் 2016-ஆம் ஆண்டு சீசனில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை கொச்சியில் வீழ்த்தி, அட்லெடிகோ டி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
முன்னதாக, ஐஎஸ்எல் ஆரம்ப சீசனில் (2014) பட்டம் வென்ற கொல்கத்தா, தற்போது 2-ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.
கொச்சியில் ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் கேரளா-கொல்கத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கேரளா முதல் கோல் அடித்தது.
ஆட்டத்தின் 37-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. கேரளாவின் மெஹ்தாப் ஹொûஸன் அடித்த அந்தப் பந்தை, தலையால் முட்டி துல்லியமான கோலாக்கினார் முகமது ரஃபி.
எனினும், அடுத்த 7 நிமிடங்களில் அதற்கு பழி வாங்கியது கொல்கத்தா. ஆட்டத்தின் 44-ஆவது நிமிடத்தில் கொல்கத்தாவுக்கு கிடைத்த கார்னர் கிக்கை, அந்த அணியின் டெளட்டி கர்லஸ் அடிக்க, கோல் போஸ்ட் அருகே நின்ற சக வீரர் செரினோ அந்தப் பந்தை தலையால் முட்ட முனைந்தார்.
அப்போது, கேரளத்தின் தடுப்பாட்டக்காரர் சந்தேஷ் தோளைப் பிடித்து அழுத்தி தடுத்தபோதும், மீறி பந்தை தலையால் முட்டி கோலடித்தார் செரினோ.
இதனால், ஆட்டம் முதல் பாதியிலேயே 1-1 என சமன் ஆனது. தொடர்ந்து நடைபெற்ற 2}ஆவது பாதி ஆட்டத்திலும் இரு அணிகளுமே கோல் அடிக்காததால், கூடுதல் நேரம் (30 நிமிடங்கள்) அளிக்கப்பட்டது.
அதிலும் இரு அணிகளுமே கோல் ஏதும் அடிக்காததை அடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 4-3 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வெற்றி பெற்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.