இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக ஆசியக் கோப்பையை வென்றது வங்கதேச மகளிரணி...

Asianet News Tamil  
Published : Jun 11, 2018, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக ஆசியக் கோப்பையை வென்றது வங்கதேச மகளிரணி...

சுருக்கம்

bangladesh defeat indai won asian cup

ஆசியக் கோப்பை மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியாவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் மகளிரணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

ஆசியக் கோப்பை மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற இதன் இறுதி ஆட்டத்தில் ஆறு முறை சாம்பியன் வென்ற இந்தியாவும், வங்கதேச அணியும் மோதின.

முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 112 ஓட்டங்களையே எடுத்தது. 

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் மட்டுமே சிறப்பாக ஆடி 42 பந்துகளில் 56 ஓட்டங்களை குவித்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.

வங்கதேச பந்து வீச்சாளர்கள் கடிஜா, ருமானா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர், ஆடிய வங்கதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 113 ஓட்டங்களை எடுத்து வென்றது. அந்த அணியின் நிகார் சுல்தானா 27 ஓட்டங்கள், ருமானா 23 ஓட்டங்களை குவித்தனர்.  சிறப்பாக ஆடி 3 விக்கெட் வித்தியாசத்தில் முதன்முறையாக கோப்பையை வென்றது.

ஏற்கெனவே ரௌண்ட் ராபின் ஆட்டத்திலும் வங்கதேசத்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது என்பது கூடுதல் தகவல்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ 3-வது ஓடிஐ.. வேஸ்ட் லக்கேஜ்.. ஆல்ரவுண்டரை நீக்கிய பிசிசிஐ.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
IND VS NZ டி20 தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா?