நீயுமாப்பா.. பாகிஸ்தான்காரன் வாயை கொடுத்து வாங்கி கட்டியது பத்தாதா..? வங்கதேசத்தை வச்சு செய்ய தயாராகும் இந்தியா

By karthikeyan VFirst Published Sep 21, 2018, 12:14 PM IST
Highlights

இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது வங்கதேச அணிக்கு சாதகம்தான் என அந்த அணியின் கேப்டன் மோர்டசா தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது வங்கதேச அணிக்கு சாதகம்தான் என அந்த அணியின் கேப்டன் மோர்டசா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து ஓய்வில்லாமல் ஆடிக்கொண்டிருப்பதால் ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இரண்டரை மாதத்திற்கும் மேலாக சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஆடியது. இதில் அனைத்து போட்டிகளிலும் ஆடிய விராட் கோலிக்கு, ஆசிய கோப்பையில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

விராட் கோலி இல்லாததால் ஆசிய கோப்பையில் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ரோஹித் சிறப்பாகவே கேப்டன்சி செய்கிறார். ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 

கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணி வலுவாகவே இருக்கிறது என்பது கங்குலி, காம்பீர், சேவாக் உள்ளிட்ட முன்னாள் வீரர்களின் கருத்து. அதை உறுதி செய்யும் வகையில், இந்திய அணியும் சிறப்பாகவே ஆடிவருகிறது. ஆனால் கோலி இல்லாதது தங்களது அணிக்கு சாதமாகத்தான் இருக்கும் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் நினைப்பு தவறு என்பதை நிரூபிக்கும் விதமாக கோலி இல்லமாலேயே எளிதாக பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய அணி. கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணி சிறந்தே விளங்குகிறது.

சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள வங்கதேச கேப்டன் மோர்டசா, இந்திய அணியில் விராட் கோலி வங்கதேச அணிக்கு மட்டுமல்லாமல் எந்த எதிரணிக்குமே சாதகமாக இருக்கும் என தெரிவித்தார். கோலி இல்லாமல்தான் நிதாஹஸ் டிராபியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளை அடித்து துவம்சம் செய்து இந்திய அணி வென்றது. அதை வங்கதேச கேப்டன் மறந்துவிட்டார் போல..? மேலும் ஆசிய கோப்பை தொடரிலும் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாகவே ஆடியுள்ளது. 

மோர்டசாவின் நினைப்பை தகர்க்கும் வகையில், இன்றைய போட்டியிலும் இந்திய வீரர்கள் கண்டிப்பாக சிறப்பாகவே ஆடுவார்கள்.
 

click me!