ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதி மோதும் ரோஜர் ஃபெடர் - ஹியோன் சங்...

 
Published : Jan 25, 2018, 11:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதி மோதும் ரோஜர் ஃபெடர் - ஹியோன் சங்...

சுருக்கம்

Australian Open Tennis Semi final Roger Federer - Hion Chung ...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், தென் கொரியாவின் ஹியோன் சங்கும் மோதுகின்றனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் காலிறுதி ஒன்றில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், போட்டித் தரவரிசையில் 19-வது இடத்தில் இருந்த செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முடிவில் நடப்புச் சாம்பியனான ஃபெடரர் 7-6(7/1), 6-3, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.

மெல்போர்னில் இதுவரை தாமஸ் பெர்டிச்சை 5 முறை சந்தித்துள்ள ஃபெடரர், அனைத்திலுமே வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவின் ஹியோன் சங் 6-4, 7-6(7/5), 6-3 என்ற செட்களில் அமெரிக்காவின் டென்னைஸ் சேன்ட்கிரெனை வென்றார்.

இரண்டு காலிறுதி போட்டிகளிலும் வெற்றிப் பெற்ற  ரோஜர் ஃபெடரரும், ஹியோன் சங்கும் அடுத்து அரையிறுதியில் மோத உள்ளனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

அந்த ஒரு தோல்வி மனசே உடைஞ்சு போச்சு.. உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்த ரோகித்
முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!