ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பிரான்ஸ் வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்...

 
Published : Jan 19, 2018, 11:02 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பிரான்ஸ் வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்...

சுருக்கம்

Australian Open tennis Jokovitch victory over France

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்சை வீழ்த்தி செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் போட்டித் தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2-வது சுற்றில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்சை வீழ்த்தினார்.

முதல் செட்டை 4-6 என இழந்த ஜோகோவிச், 6-3, 6-1, 6-3 என அடுத்த 3 செட்களை தன் வசமாக்கினார். இந்த வெற்றியின் மூலம் அவர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-4, 6-4, 7-6 (7/4) என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜேன் லெனார்ட் ஸ்ட்ரஃபை வீழ்த்தினார்.

இதர 2-வது சுற்று ஆட்டங்களில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 6-7(6/8), 3-6, 6-3, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி அமெரிக்காவின் டெனிஸ் குத்லாவையும், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் 6-1, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான பீட்டர் கோஜோவ்ஸிக்கை வென்றனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் தங்களது 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

2-வது சுற்றுகளில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் -பூரவ் ராஜா இணை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஜார்ஜியாவின் நிகோலஸ் பாஷிலாஷ்விலி - ஆஸ்திரியாவின் ஆன்ட்ரியா ஹெய்தர் இணையை வென்றது.

இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பிரான்ஸின் எட்வர்ட் ரோஜர் வாùஸலின் இணை 6-2, 7-6(7/5) என்ற செட் கணக்கில் கனடாவின் வாசெக் போஸ்பிஸில்-அமெரிக்காவின் ரயான் ஹாரிசன் இணையை வீழ்த்தியது.

இந்தியாவின் திவிஜ் சரண்-அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி 7-6(7/5), 6-4 என்ற செட் கணக்கில் செர்பியாவின் விக்டர் டிராய்க்கி-ருமேனியாவின் மேரியஸ் கோபில் இணையை வீழ்த்தியது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா
ஹாட்ரிக் கோல் அடித்த கிலியன் எம்பாப்பே யார் தெரியுமா? இவரோட வேல்யூ தெரியுமா?