
ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சாய் பிரணீத் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் ஸ்ரீகாந்த், உலகின் முதல் நிலை வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவுடன் மோதினார்.
இதில், 15-21, 21-13, 21-13 என்ற செட் கணக்கில் சன் வான் ஹோவை தோற்கடித்தார்.
ஸ்ரீகாந்த் தனது காலிறுதியில் சாய் பிரணீத்துடன் மோதுகிறார்.
சாய் பிரணீத் தனது முந்தைய சுற்றில் சீனாவின் ஹுயாங் யூக்ஸியாங்கை மோதியதில் 21-15, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் யூக்ஸியாங்கை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார் சாய் பிரணீத்.
மகளிர் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் பி.வி.சிந்த, சீனாவின் சென் ஸியாக்ஸினுடன் மோதினார்.
இதில், 21-13, 21-18 என்ற நேர் செட்களில் சென் ஸியாக்ஸினை தோற்கடித்தார் சிந்து.
அடுத்த சுற்றில் சிந்து போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீன தைபேவின் தாய் ஜு இங்கை எதிர்கொள்கிறார்.
சாய்னா தனது 2-ஆவது சுற்றில் 21-15, 20-22, 21-14 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சோனியை வீழ்த்தினார்.
சாய்னா தனது காலிறுதியில் சீனாவின் சன் யூவை சந்திக்கிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.