ஒரே ஒரு மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி!! ஆஸ்திரேலியா பேட்டிங்

By karthikeyan VFirst Published Jan 15, 2019, 8:50 AM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

முதல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. அந்த போட்டியில் ஆடிய இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது பெரிதாக சோபிக்கவில்லை. 8 ஓவர்கள் வீசி 55 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. ஆனால் அவர் உலக கோப்பையில் ஆட வாய்ப்பிருப்பதால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் முழுவதுமாக ஆடவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

எனினும் இந்த போட்டியில் அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக முகமது சிராஜுடன் இந்திய அணி களமிறங்குகிறது. பார்ட் டைம் பவுலிங் ஆப்ஷனை கருத்தில் கொண்டு தினேஷ் கார்த்திற்கு பதிலாக கேதர் ஜாதவ் அணியில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேதர் ஜாதவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த போட்டியிலும் தினேஷ் கார்த்திக் தான் ஆடுகிறார். முதல் போட்டியில் ஆடிய அதே அணியுன் ஆஸ்திரேலியா களம் காண்கிறது. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, தவான், கோலி(கேப்டன்), ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, குல்தீப், புவனேஷ்வர் குமார், ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலிய அணி:

ஃபின்ச்(கேப்டன்), அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கம்ப், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், நாதன் லயன், ரிச்சர்ட்ஸன், பீட்டர் சிடில், பெஹ்ரெண்டோர்ஃப்.

click me!