ஷான் மார்ஷ் அபார சதம்.. கடைசி நேரத்தில் பிரேக் கொடுத்த புவனேஷ்வர் குமார்!! கடந்த போட்டியை விட அதிகமான இலக்கு நிர்ணயம்

By karthikeyan VFirst Published Jan 15, 2019, 1:03 PM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 299 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 299 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்துவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஃபின்ச் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகிய இரண்டு விக்கெட்டுகளையும் விரைவில் இழந்துவிட்டத்.

26 ரன்களுக்கே அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், உஸ்மான் கவாஜாவும் ஷான் மார்ஷும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். இந்திய அணியின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடினர். எனினும் இந்த பார்ட்னர்ஷிப்பை ஜடேஜா உடைத்தார். உஸ்மான் கவாஜாவை அருமையான ரன் அவுட் மூலம் வெளியேற்றினார். கவாஜாவை ரன் அவுட்டாக்கிய ஜடேஜா, ஹேண்ட்ஸ்கம்ப்பை 20 ரன்களில் வெளியேற்றினார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடிய ஷான் மார்ஷ் சதம் விளாசினார். சதமடித்த பிறகு அடித்து ஆட தொடங்கினார். அவருடன் இணைன்து மேக்ஸ்வெல்லும் அடித்து ஆட, ஒரு கட்டத்தில் இமாலய இலக்கை எட்டும் நிலையில் இருந்தது ஆஸ்திரேலிய அணி. 

ஆனால் மேக்ஸ்வெல் மற்றும் ஷான் மார்ஷ் ஆகிய இருவரையும் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் புவனேஷ்வர் குமார். மேக்ஸ்வெல் 48 ரன்களில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் ஷான் மார்ஷையும் வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். களத்தில் நிலைத்து ஆதிக்கம் செலுத்தி ஆடிவந்த மேக்ஸ்வெல் மற்றும் ஷான் மார்ஷ் ஆகிய இருவரையும் 48வது ஓவரில் வீழ்த்தி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார் புவனேஷ்வர் குமார். 48 ஓவரில் 284 ரன்களை எடுத்திருந்தது. ஷமி வீசிய 49வது ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 12 ரன்களை குவித்தார் லயன். 

இதையடுத்து 50 ஓவர் முடிவில் அந்த அணி 298 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும் ஷமி 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

click me!