ஆஸ்திரேலியா 320 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி; கர்ஜிக்கும் தென் ஆப்பிரிக்கா...

Asianet News Tamil  
Published : Mar 26, 2018, 11:15 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
ஆஸ்திரேலியா 320 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி; கர்ஜிக்கும் தென் ஆப்பிரிக்கா...

சுருக்கம்

Australia lost by 320 runs south africa won

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 322 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
 
 தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 97.5 ஓவர்களில் 311 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 69.5 ஓவர்களில் 255 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 56 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்ஸில் 112.2 ஓவர்களில் 373 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க்ரம் 84 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 

ஆஸ்திரேலியா தரப்பில் ஹேஸில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஸ்டார்க் ஒரு விக்கெட் சாய்த்தார். 

பின்னர், 430 ஓட்டங்களை இலக்காக கொண்டு 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 32 ஓட்டங்கள் எடுத்தார். எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ஓட்டங்களில் வீழ்ந்தனர்.
 
தென் ஆப்பிரிக்க தரப்பில் மோர்ன் மோர்கெல் 5, கேசவ் மஹராஜ் 2, ரபாடா ஒரு விக்கெட் சாய்த்தனர்.

இறுதியில் வெற்றி இலக்காக 430 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா 107 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வி அடைந்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

நியூசிலாந்து ஓடிஐ தொடரில் 2 இந்திய 'ஸ்டார்' வீரர்களுக்கு ஓய்வு.. ரசிகர்கள் ஷாக்.. பிசிசிஐ முடிவு!
சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்