ஆஸ்திரேலிய பேட்டிங் ஆர்டரை சரித்த பும்ரா!! 8 விக்கெட்டுகளை இழந்து திணறும் ஆஸி., இந்தியாவிற்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு

By karthikeyan VFirst Published Dec 28, 2018, 10:12 AM IST
Highlights

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டரை இந்திய பவுலர்கள் சரித்துவிட்டனர். 
 

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டரை இந்திய பவுலர்கள் சரித்துவிட்டனர். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, புஜாராவின் சதம், மயன்க், கோலி, ரோஹித் சர்மா ஆகிய மூவரின் பொறுப்பான அரைசதத்தால் 443 ரன்களை குவித்தது. இரண்டாம் நாள் ஆட்டம் முடிய 6 ஓவர்கள் இருந்த நிலையில், இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களை எடுத்திருந்தது. அத்துடன் இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து இரண்டாம் நாளான நேற்று முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. 

மூன்றாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஃபின்ச்சின் விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். இதையடுத்து  மார்கஸ் ஹாரிஸ், ஷான் மார்ஷ் ஆகிய இருவரையும் பும்ராவும் உஸ்மான் கவாஜாவை ஜடேஜாவும் வீழ்த்தினர். மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

உணவு இடைவேளைக்கு பிறகு டிராவிஸ் ஹெட்டை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் பும்ரா. மிட்செல் மார்ஷை ஜடேஜாவும் கம்மின்ஸை ஷமியும் வீழ்த்தினர். டீ பிரேக் வரை ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை எடுத்திருந்தது. 

டீ பிரேக் முடிந்து வந்ததும் முதல் ஓவரை ஜடேஜா வீசினார். அடுத்த ஓவரை வீசிய பும்ரா, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னை வீழ்த்தி வெளியேற்றினார். இதையடுத்து அந்த அணி 147 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது. பெரிய வித்தியாசத்துடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்க உள்ளது. எனவே இந்த போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 
 

click me!