
மலேசியாவில் நடந்து வரும் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியில், இன்று நடந்த லீக் ஆட்டத்தில், உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோல்விகண்டது இந்திய அணி.
26-வது அஸ்லான் ஷா ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, மலேசியா, இங்கிலாந்து, ஜப்பான், நியூசிலாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்த இந்திய அணி, அடுத்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்நிலையில், இன்று நடந்த லீக் ஆட்டத்தில் கேப்டன் மாத்யூ ஸ்வான் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி.
இரு அணிகளும் ஒருவொருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற கணக்கில் தொடக்கத்தில் இருந்தே களத்தில் பந்தை கடத்தினர். முதல் கால்பகுதியில் இரு அணிகளுக்கும் தலா 2 பெனால்டி கார்னர்கிடைத்தும் அதை கோல் ஆக்க தவறினர்.
2-வது காலிபகுதியில் 26-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ஹர்மன் ப்ரீத்சிங் கோல் அடித்து இந்திய அணியை 1-0 என்று கணக்கில் முன்னிலைப்படுத்தினார். அடுத்த சிறிதுநேரத்தில் பதிலடி கொடுத்த ஆஸ்திரேலிய அணி 30-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் எடி ஆக்கென்டன் கோல் அடித்து சமன் செய்தார்.
அதன்பின், கோல் அடிக்க இந்திய வீரர்கள் கடுமையாக முயற்சி செய்தும் அதை ஆஸ்திரேலிய வீரர்கள் முறியடித்தனர். 34-வது நிமிடத்தில் ஆஸ்திலேயி வீரர் டாம் கிரெய்க், 51-வது நிமிடத்தில் டாம் விக்ஹாம் கோல் அடித்தனர். இதையடுத்து ஆட்டநேர முடிவில் இந்திய அணியை 1-3 என்ற கோல்கணக்கில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.