
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 441 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்துள்ளது ஆஸ்திரேலியா.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் வியாழக்கிழமைத் தொடங்கியது.
இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 94.5 ஓவர்களில் 260 ஓட்டங்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்த்து.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறியது.
முதல் இன்னிங்சில் 40.1 ஓவர்களில் 105 ஓட்டங்களில் சுருண்டது. விஜய், ராகுல், ரஹானே தவிர இந்திய அணியில் வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது.
கடைசி 7 விக்கெட்டுகளை இந்திய அணி வெறும் 11 ஓட்டங்களில் பறிகொடுத்தது. பின்னர் 155 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 2–வது நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்கள் சேர்த்தது.
இதனையடுத்து இன்றைய மூன்றாவது நாள் ஆட்டம் துவங்கியதில் இருந்து அசத்தலாக ஆடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் சதம் அடித்தார்.
அவருக்கு பக்கபலமாக மறுமுனையில் வந்த வீரர்களும் கணிசமான ஓட்டங்களை சேர்த்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
109 ஓட்டங்கள் அடித்த ஸ்மித் 7-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 87 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 285 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணி தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து இந்திய அணிக்கு 441 ஓட்டங்கள் என்ற பெரும் இலக்கை வெற்றிக்கு நிர்ணையித்த்து.
தற்போதைய சூழலில், முதல் டெஸ்ட்டின் வெற்றி என்பது ஆஸ்திரேலிய அணியின் கையில் இருக்கிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.