
ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின் - பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் மோதவுள்ளனர்.
ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முன்னதாக நடைபெற்ற 2-வது அரையிறுதியில் அமெரிக்காவின் ஜேக் சாக்கை எதிர்கொண்டார் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ்.
இந்த ஆட்டத்தில் கிரிகோர் டிமிட்ரோவ் 4-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் ஜேக் சாக்கை வெற்றிக் கொண்டார்.
வெற்றிக்குப் பிறகு டிமிட்ரோவ் பேசியது:
"மிகுந்த ஒருங்கிணைப்பாக ஆடினேன். எந்தவொரு எதிர்மறையான சிந்தனைகளும் எனக்குள் எழாமல் பார்த்துக் கொண்டேன். இது, இந்த சீசனின் கடைசி போட்டியின் இறுதிச்சுற்று என்பதால் கூடுதல் பரபரப்புடன் இருக்கிறது' என்றார்.
டிமிட்ரோவுடன் இறுதிச்சுற்றில் மோதும் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின் , தனது அரையிறுதியில் ஃபெடரரை வீழ்த்தியிருந்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.