ஐஎஸ்எல் அப்டேட்: லாவகமான ஆட்டத்தால் சென்னையை வீழ்த்தியது கோவா...

Asianet News Tamil  
Published : Nov 20, 2017, 09:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
ஐஎஸ்எல் அப்டேட்: லாவகமான ஆட்டத்தால் சென்னையை வீழ்த்தியது கோவா...

சுருக்கம்

Isl update Goa defeated Chennai

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் மூன்றாவது ஆட்டம் சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் கோவா ஆரம்பத்திலேயே மூன்று கோல்கள் அடிக்க, இறுதி நேரத்தில் 2 கோல்கள் அடித்தது சென்னை அணி.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே கோவா ஆதிக்கம் செலுத்தியதால் இந்த சீசனின் முதல் கோல் வாய்ப்பை பெற்றது.  ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் கோவா வீரர் ஃபெரான் டெலசியா அற்புதமாக கோலடித்தார்.

ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் கோவா வீரர் மானுவேல் லான்ஸரோட்டே தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 39-வது நிமிடத்தில் கோவா 3-வது கோல் பதிவு செய்தது.  இவ்வாறாக முதல் பாதி ஆட்டநேர முடிவில் கோவா 3-0 என முன்னிலை வகித்தது.

பின்னர், நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் 70-வது நிமிடத்தில் சென்னை வீரர் இனிகோ ஸபாடெரியா தனது அணிக்கான கோல் கணக்கை தொடங்கினார். தொடர்ந்து 84-வது நிமிடத்தில் சென்னை வீரர் ரஃபேல் அகஸ்டோ கோலடித்தார்.

கோவாவுக்கு நெருக்கடி ஏற்பட தனது முன்னிலையை தக்க வைக்கும் வகையில் தடுப்பாட்டம் ஆடி 3-2 என்ற கோல் கணக்கில் நிலைத்து ஆடி வெற்றி பெற்றது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs IRE 1st T20: முதல் டி20-யில் இந்தியாவை அலற விட்ட அயர்லாந்து.. மாஸ் வெற்றி.. சரித்திர சாதனை!
FIFA World Cup 2026: கடைசி நிமிட கோலால் த்ரில் வெற்றி! அமெரிக்காவை வீழ்த்தி ஆறுதல் அடைந்த துருக்கி