Sourav Ganguly: அமித் ஷா வீட்டில் முடிவான கங்குலியின் விதி!ரசிகர்களுக்கு ஷாக் அளித்த 'தாதா'வின் திடீர் முடிவு

By Pothy Raj  |  First Published Oct 17, 2022, 11:23 AM IST

பிசிசிஐ தலைவர் பதவியில் தொடரப்போவதில்லை என்று தெரிவித்த 4 நாட்களுக்குப்பின், மேற்கு வங்கத்தின் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட சவுரவ் கங்குலி விண்ணப்பம் செய்ய முடிவு செய்துள்ளார்.


பிசிசிஐ தலைவர் பதவியில் தொடரப்போவதில்லை என்று தெரிவித்த 4 நாட்களுக்குப்பின், மேற்கு வங்கத்தின் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட சவுரவ் கங்குலி விண்ணப்பம் செய்ய முடிவு செய்துள்ளார்.

பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலக கங்குலி முடிவு செய்தநிலையில் அவருக்கு ஐபிஎல் தலைவர் பதவியை தர பிசிசிஐ நிர்வாகம் முன்வந்தது. ஆனால்,அதை எல்லாம் நிராகரித்துவிட்டு, மேற்கு வங்கம் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் தேர்தலில் கங்குலி போட்டியிடுவது ரசிகர்களுக்கு வியப்பை ஆழ்த்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

2 டோஸ் செலுத்திக்கொண்ட சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று.. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை.!

வங்காள கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றும், வரும் 22ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யப்போவதாக சவுரவ் கங்குலி ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒருவேளை தலைவராக கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டால், தனது சொந்த மாநிலத்தில் கிரிக்கெட் சங்கத்துக்கு 2வதுமுறையாக தலைவர் பதவியை கங்குலி ஏற்பார்.

ஸ்டூவர்ட் பின்னி கர்நாடக கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை பொன்னெழுத்துக்களால் பொறிக்கணும்..! தாதா புகழாரம்

கடந்த 6ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 6-ஏ கிருஷ்ணன் மேனன் மார்க்இல்லத்தில் நடந்த சந்திப்பின்போதுதான் சவுரவ் கங்குலிக்கு 2வது முறையாக பிசிசிஐ தலைவர் பதவி வழங்கக்கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவும், அவரின் மகனும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் பங்கேற்றுள்ளனர்.

 பிசிசிஐ அமைப்பில் எந்த பதவியும் வகிக்காத அமித் ஷா பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அந்தக் கூட்டத்தில்தான் ஐபிஎல் தலைவராக மத்தியஅ மைச்சர்அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமாலை நியமிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

சவுரவ் கங்குலிக்கு ஏன் 2வது முறையாக தலைவர் பதவி நீட்டிப்பு வழங்கவில்லை, ஆனால், அமித் ஷா மகனுக்கு மட்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது ஏன் என்பது குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை. பிரதம்ர மோடி வாரிசு அரசியல், வாரிசுப் பதவி குறித்து தேரத்ல் பிரச்சாரத்தில் பேசி வரும்போது, அமித்ஷா மகன் தொடர்ந்து 2வது முறையாக பிசிசிஐ செயலாளராகவும், அனுராக் தாக்கூர் சகோதரருக்கு ஐபிஎல் தலைவர் பதவியும் வழங்கட உள்ளது.

அந்த விஷயத்துலலாம் நான் தலையிடுறதே இல்ல..! அணி நிர்வாகம் பார்த்துக்கும்.. தாதா தடாலடி

பிசிசிஐ தலைவர் பதவியை உதறிய சவுரவ் கங்குலி நாளை மும்பைக்கு சென்று, அங்கு பிசிசிஐ அதிகாரிகளிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். பிசிசிஐ தலைவராக கங்குலி வருவதற்கு முன் கடந்த 2015 முதல் 2019ம் ஆண்டுவரை வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். 
பிசிசிஐ விதிமுறைப்படி ஒருவர்4 ஆண்டுகள் மட்டுமே தலைவராக இருக்க முடியும், அதன்பின் இடைவெளியிட்டு 2வதுமுறையாக பதவிக்கு வரலாம். அந்த வகையில் மீண்டும் 4 ஆண்டுகள் தலைவராக கங்குலிஇருக்க முடியும்.

வங்காள கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் தலைவர் அவிஷக் டால்மியாவுக்கு அடுத்தார்போல், சவுரவ் கங்குலி வருவார் என கங்குலி சகோதரர் ஸ்நேகாசிஷ் கங்குலி தெரிவித்தார்

இதற்கிடையே ஐசிசி தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி போட்டியிடப் போவதாக தகவல்கள் தெரிவித்தன. இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில் வரும் 18ம் தேதி நடக்கும் கூட்டத்தில்தான் ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலியை போட்டியிட வைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது

click me!