ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா....

Asianet News Tamil  
Published : Feb 07, 2018, 11:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா....

சுருக்கம்

Asian teams beat Hong Kong in the Badminton Championship

ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஹாங்காங்கை வென்றது.

ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மலேசியாவில் நடைபெறுகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சிந்து 21-12, 21-18 என்ற செட்களில் யிப் புய் யின்னை வீழ்த்தி அசத்தினார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் சிக்கி ரெட்டி - சிந்து இணை 21-15, 15-21, 21-14 என்ற செட்களில் டிஸ் யாவ் - யுவென் சின் யிங் இணையை வீழ்த்தி வெற்றிக் கண்டது.

மகளிர் இரட்டையர் பிரிவு மற்றொரு ஆட்டத்தில் விங் யங் - யுவெங் கா இணை 22-20, 20-22, 10-21 என்ற செட்களில் அஸ்வினி பொன்னப்பா - பிரஜக்தா சாவந்த் இணையை வென்றது.

மகளிர் ஒற்றையர் மற்றொரு ஆட்டத்தில் செயுங் யிங் மெய் 19-21, 21-18, 20-22 என்ற செட்களில் ஸ்ரீகிருஷ்ணப் பிரியா குதரவள்ளியை தோற்கடித்தார்.

மூன்றாவது மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ருத்விகா ஷிவானி கட்டே 16-21, 21-16, 21-13 என்ற செட்களில் யெங் சம் யீயை வென்றார்.

அதன்படி, ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஹாங்காங்கை வென்றுள்ளது.

இந்தியா, நாளை தனது அடுத்த ஆட்டத்தில் ஜப்பானை சந்திக்கிறது. அந்த அணியில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனை அகான யமாகுசி, நடப்பு உலக சாம்பியன் நஜோமி ஒகுஹரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs WI: இந்தியாவுக்கு முக்கியமான போட்டி; ஒருவேளை மழையால் ரத்தானால் என்னாகும்? அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா?
ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்தியா.. அரையிறுதி செல்ல இனி என்ன செய்ய வேண்டும்?