
ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியில் இந்திய அணி 6-2 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை தோற்கடித்து அபார வெற்றி கண்டது.
ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.
இந்த ஆட்டத்தில் 14-வது நிமிடத்தில் இந்தியா தனது கோல் கணக்கை தொடங்கியது. அணியின் ஆகாஷ்தீப் அருமையாக ஒரு ஃபீல்டு கோல் அடித்தார்.
பின்னர், ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார்.
அடுத்து 24-வது நிமிடத்தில் இந்திய வீரர் உத்தப்பா ஒரு கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் 33 மற்றும் 40-வது நிமிடத்தில் இந்தியா சார்பில் முறையே குர்ஜந்த் சிங் மற்றும் எஸ்.வி.சுனில் தலா ஒரு கோல் அடித்தனர்.
இந்தியா 5-0 என முன்னிலை பெற்றிருந்தபோது ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் மலேசிய அணிக்கு மீண்டும் கிடைத்த ஒரு பெனால்டி வாய்ப்பை அணியின் ராஸி ரஹிம் கோலாக மாற்றினார்.
தொடர்ந்து 59-வது நிமிடத்தில் அந்த அணியின் ரமதான் ரோஸ்லி ஒரு கோல் அடிக்க, மலேசிய அணி 2-5 என முன்னேறியது.
எனினும், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் 60-வது நிமிடத்தில் இந்திய வீரர் சர்தார் சிங் ஒரு கோல் அடிக்க, இந்தியா 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து 3-வது இடத்துக்கான போட்டியில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.