
ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அசத்தல் வெற்றிப் பெற்றது.
ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அசத்தலாக ஆடிய இந்தியா 3-வது நிமிடத்தில் எஸ்.வி.சுநீல் கோலடிக்க, அடுத்த நிமிடமே ஜப்பான் கோலடித்தது.
பிறகு இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை ஹர்மான்பிரீத் சிங் கோட்டைவிட்டார். ஆனால், 22-வது நிமிடத்தில் ஹர்மான்பிரீத் கொடுத்த பாஸில் லலித் உபாத்யாய் கோலடிக்க, இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து 33-வது நிமிடத்தில் சுநீல் கொடுத்த கிராஸில், ரமன்தீப் சிங் கோலடித்தார்.
பின்னர், ஹர்மான்பிரீத் 35 மற்றும் 48-வது நிமிடங்களில் கோலடித்ததால் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.