
நேற்றைய ஆட்டத்தில் 256 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவின் கடைசி வீரர் ஸ்டார்க்கை, முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் அஸ்வின். இதனால், ஆஸ்திரேலியா 260 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி புணேவில் நேற்றுத் தொடங்கியது.
இதில் இந்திய அணி 5 பெளலர்களுடன் களமிறங்கியது. 3-ஆவது சுழற்பந்து வீச்சாளராக ஆல்ரவுண்டர் ஜெயந்த் யாதவ் இடம்பெற்றார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 94 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்கள் எடுத்தது.
மிட்செல் ஸ்டார்க் 58 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 57, ஹேஸில்வுட் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்று ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஸ்டார்க்கின் விக்கெட்டை 61 ஓட்டங்களில் வீழ்த்தினார் அஸ்வின்.
இதனால் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 94.5 ஓவர்களில் 260 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 12 ஓவர்களில் 32 ஒட்டங்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.