கம்மின்ஸின் காலுக்குள் புகுந்து ஆட்டம் காட்டிய அஷ்வினின் பந்து!! வீடியோவை பாருங்க.. அசந்துடுவீங்க

By karthikeyan VFirst Published Dec 8, 2018, 1:48 PM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களும் ஆஸ்திரேலிய அணி 235 ரன்களும் எடுத்தன. 
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களும் ஆஸ்திரேலிய அணி 235 ரன்களும் எடுத்தன. 

இதையடுத்து 15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்துவருகிறது. முதல் விக்கெட்டுக்கு ராகுலும் முரளி விஜயும் 63 ரன்களை சேர்த்தனர். முரளி விஜய் 18 ரன்களிலும், ஆஸ்திரேலிய பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய ராகுல் 44 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து புஜாராவும் கோலியும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவருகின்றனர். 

முதல் இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை அதைவிட 15 ரன்கள் குறைவாகவே சுருட்டியது. அதற்கு அஷ்வின் மிக முக்கிய காரணம். ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கவாஜா, ஷான் மார்ஷ், மார்கஸ் ஹாரிஸ் ஆகிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார் அஷ்வின். 

அஷ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இல்லையென்றாலும், டெஸ்டின் தான் ஒரு கிங் என்பதை இந்த ஆட்டத்தில் மீண்டும் பறைசாற்றினார் அஷ்வின். 

அஷ்வின் சிறப்பாக வீசிக்கொண்டிருந்தபோது, விக்கெட் எடுக்க வேண்டிய பந்து ஒன்று, கம்மின்ஸின் அதிர்ஷ்டத்தால் விக்கெட் இல்லாமல் ஏமாந்தது. கம்மின்ஸ் பேட்டிங் ஆடியபோது அஷ்வின் வீசிய பந்து ஒன்று, கம்மின்ஸின் இரண்டு கால்களுக்கும் நடுவே புகுந்து சென்றது. ஆனால் அந்த பந்து ஸ்டம்புக்கு சற்று மேலே சென்றதால் கம்மின்ஸ் தப்பினார். மிகவும் துல்லியமான அந்த பந்தை கண்டு கம்மின்ஸ் மிரண்டார். பந்து ஸ்டம்பில் படாததை கண்டு ரிஷப்பும் அஷ்வினும் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீடியோ இதோ... 

'He's nutmegged him' - pic.twitter.com/Jbfn3gfCrW

— Fox Cricket (@FoxCricket)
click me!